சீனாவிலிருந்து இலங்கைக்கு முட்டை இன்குபேட்டர்கள்

457

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் முட்டை இன்குபேட்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.

கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை வலுவூட்டும் நோக்கத்துடன், 100 முட்டை இன்குபேட்டர்கள் இன்று(08) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் வழங்கி வைக்கப்பட்டது.

சீனாவின் யுனான் மாகாணத்திற்கான விஜயத்தின் போது பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, சீனத் தூதுவர் Qi Zhenhong 100 இன்குபேட்டர்களை பிரதமரிடம் கையளித்தார், மேலும் இந்த இயந்திரங்கள் விவசாய அமைச்சின் ஹடபிமா அதிகாரசபையால் நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here