follow the truth

follow the truth

May, 6, 2025
Homeவணிகம்300க்கும் மேற்பட்டவர்களின் பங்கேற்புடன் சுவ திவிய நிறுவனத்தின் முதலாவது பொது நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது

300க்கும் மேற்பட்டவர்களின் பங்கேற்புடன் சுவ திவிய நிறுவனத்தின் முதலாவது பொது நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது

Published on

நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமான Suva Diviya நிறுவனம், இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தினால் ‘Unmask Diabetes’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஒரு சிறப்பு பொது நிகழ்ச்சியை நடத்தியது, இதில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும்.
இலங்கையில் நீரிழிவு நோய் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது, அத்துடன் 30% பேருக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய அபாயம் உள்ளது. நகரத்தில் வசிக்கும் இளைஞர்களிடையே நீரிழிவு நோய் வேகமாக அதிகரித்து வருவதால் இந்த நிலைமை அதிக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனையாக மாறியுள்ளது.
மேலும் உடற்பயிற்சியின்றி அவர்களின் செயலற்ற வாழ்க்கை முறை இந்த சிக்கலை அதிகப்படுத்துகிறது மற்றும் இது நாட்டின் பணியாளர்களை நேரடியாக பாதிக்கிறது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இந்த நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள், சுமார் ஒரு மில்லியன், தங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என்று தெரியாதுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரபல நாளமில்லாச் சுரப்பியியல் நிபுணரும் உட்சுரப்பியல் பீடத்தின் தலைவருமான டொக்டர் திருமதி திமுத்து முதுகுடா சிறப்புரையாற்றினார். நீரிழிவு நோயின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்த மருத்துவர், நீரிழிவு நோயின் தீவிரத்தன்மை மற்றும் அதைப் பற்றி அதிக விழிப்புணர்வு பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட இந்நோயின் தீவிரம் குறித்தும், சர்க்கரை நோய் பற்றிய தவறான புரிதல்களை அகற்றி, அதை பற்றிய சரியான தெளிவான புரிதலை வழங்குவதே தனது விரிவுரையின் முக்கிய நோக்கமாக இருந்தது. இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்தல் மற்றும் பயனுள்ள நீரிழிவு கட்டுப்பாட்டிற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், டொக்டர் திமுத்து முத்துக்குடா, உடல்கூற்று நிபுணர் டொக்டர் டி.கே.டி. மத்யூ, கண் வைத்திய நிபுணர் டொக்டர் அமில டி சில்வா, இருதய வைத்திய நிபுணர் டொக்டர் சந்திரிகா பொன்னம்பெரும, சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் உதன ரத்னபால, நிபுணத்துவ நிபுணரான ரேணுகா ஜயதிஸ்ஸ ஆகியோரைக் கொண்ட நிபுணர் குழுவொன்று. இந்த திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி...