follow the truth

follow the truth

May, 3, 2025
Homeவணிகம்Daraz Payment Partner Performance Awards ‘23 இல் HNB சிறந்த பிரச்சார பங்காளராக அங்கீகரிக்கப்பட்டது

Daraz Payment Partner Performance Awards ‘23 இல் HNB சிறந்த பிரச்சார பங்காளராக அங்கீகரிக்கப்பட்டது

Published on

இலங்கையின் மிகவும் பல்துறை கொடுப்பனவு பங்காளியாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில், முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தெற்காசியாவின் மிகப்பெரிய e-Commerce தளமான Daraz ஆல், டிஜிட்டல் கட்டண தீர்வுகளை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டது.

வருடாந்தர Daraz Payment Partner Performance Awards 2023 நிகழ்வில் சிறந்த கார்ட் அடிப்படையிலான பிரச்சார பங்காளருக்கான விருது வங்கிக்கு வழங்கப்பட்டது.

“தொற்றுநோய் பரவ ஆரம்பித்த காலக்கட்டத்தில் துரிதமாக இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தின் மாறும் நிலப்பரப்பில், எங்களின் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மாற்றத்தை உறுதி செய்வதில் HNB ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. Daraz வழங்கும் தொடர்ச்சியான அங்கீகாரம் எங்கள் முயற்சிகளின் வெற்றியைக் காட்டுகிறது. எங்கள் அர்ப்பணிப்புள்ள குழுக்கள் வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்குவதை உறுதிசெய்ய அயராது உழைத்துள்ளன, ஒவ்வொரு விருதுக்குப் பின்னும் திருப்தியான வாடிக்கையாளர் இருப்பதை அங்கீகரித்துள்ளனர். HNB இல், டிஜிட்டல் பயணத்தை வெறும் பரிவர்த்தனைகளாக மட்டும் பார்க்காமல் அனுபவமாக பார்க்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற, பலனளிக்கும் அனுபவத்தைத் தொடர்ந்து உருவாக்குவது, டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வுகளில் புதிய அளவுகோல்களை அமைப்பது எங்கள் உறுதிமொழியாகும்.” என HNB கார்ட் பிரிவின் பிரதானி கௌதமி நிரஞ்சன் தெரிவித்தார்.

e-commerce நிறுவனத்தால் முறையே 2022 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அதிக ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் கூடிய கார்ட் கொடுக்கல் வாங்கல் அடிப்படையைக் கொண்டிருப்பதுடன், HNB சிறந்த ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கொண்ட வங்கியாகவும் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், HNB கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களுக்கான கவர்ச்சிகரமான கழிவுகளுடன் 12 மாதங்கள் வரையிலான பூஜ்ஜிய-வட்டி தவணை திட்டங்கள் உட்பட Daraz இல் HNB கார்ட் உரிமையாளர்கள் பல நன்மைகளை அனுபவிக்கின்றனர். கிரெடிட் கார்ட்களுக்கு சனிக்கிழமைகளிலும், டெபிட் கார்ட்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் e-Commerce தளத்தில் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் 10% கழிவை பெறுகின்றனர். மேலும், 11:11, மற்றும் Black Friday விற்பனை போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் பயனர்களுக்கு உற்சாகமான கழிவுகளை வழங்க வங்கி Daraz உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி...

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...