இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகளை இன்று (18) முதல் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் உரிய முட்டைகள் லங்கா சதொச நிறுவனத்திற்கு இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளதாகஅரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் முட்டை விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததால், நுகர்வோர் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.