பொருளாதார நெருக்கடி தீர்ந்து அடுத்த ஆண்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்

184

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டு அடுத்த வருடம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்பது வருடங்களாக கைவிடப்பட்டு மரந்தகஹமுலவில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட அரிசி மொத்த விற்பனை நிலையத்தை இன்று (19) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் தலையீட்டின் பேரில், இந்தக் களஞ்சியசாலை வளாகம் புனரமைக்கப்பட்டது. மரந்தகஹமுல களஞ்சியசாலை வளாகம் மற்றும் மொத்த வர்த்தக நிலையத்தின் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க திறைசேரியில் இருந்து பணம் கேட்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த ஆண்டு அமைச்சரவை பத்திரத்தையும் சமர்ப்பித்திருந்தார்.

இங்கு கட்டுமானப் பணிகள் முழுவதையும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மெற்கொண்டுள்ளது. இந்தக் களஞ்சியசாலை வளாகத்தில் சுமார் 75,000 மெட்ரிக் தொன் அரிசியை சேமித்து வைக்கும் வசதிகள் உள்ளன.

ஒரு வருடம் முன்பு நாடு எப்படி இருந்தது என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது. அரசியலுக்கு முன் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதன் அடிப்படையில் நாங்கள் உதவுகிறோம். நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, சிலர் அதைத் திரும்பப் பெற முயற்சிப்பார்கள். அதை அனுமதிக்க முடியாது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை அதிகம். இது எங்களுக்குத் தெரியும். எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். எனவே, அடுத்த ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம் என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here