நிலையான அரசை அமைப்பதே பொதுஜன பெரமுனவின் பிரதான கடமை

351

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் VAT அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும், வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல் மூலம் நிலையான அரசாங்கத்தை அமைப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மையான கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும் அரச தலைவரும் அந்தக் கட்சியின் கொள்கையிலிருந்து வேறுபட்ட கொள்கையைப் பின்பற்றும் அரசியல் கட்சியின் தலைவரே எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

வரிச்சுமையை குறைப்பது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here