மருந்து இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குழுவொன்று அமைச்சரின் வீட்டிற்குச் சென்று அது தொடர்பான வாக்குமூலத்தை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.