follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2கண்டியில் அடுத்தடுத்து வீழ்ந்த மரங்கள் - 8 வாகனங்கள் சேதம், இருவர் காயம்

கண்டியில் அடுத்தடுத்து வீழ்ந்த மரங்கள் – 8 வாகனங்கள் சேதம், இருவர் காயம்

Published on

கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இன்று(27) காலை 11 மணியளவில் அடுத்தடுத்து இருந்த இந்த மரங்களே இவ்வாறு வீழ்ந்துள்ளன.

மழை காரணமாக இந்த மரங்களின் வேர்கள் அழுகிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால், அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிகள், கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட 8 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...