சீரற்ற காலநிலையால் சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

3988

கடந்த காலங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மற்றும் மண்சரிவு காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு மாத்திரமே இது செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வழங்கப்படும் விசேட விடுமுறைகள் விடுப்புப் பதிவேட்டில் முறையாகப் பதியப்பட வேண்டும் எனவும் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

பணிக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்து, உள்ளாட்சி செயலாளர் மற்றும் உள்ளூர் கிராம அலுவலர் ஆகியோரின் பரிந்துரைகளுடன் நிறுவன தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here