உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் இராணுவ உதவிகளுக்கு வௌ்ளை மாளிகை அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுடனான போரில் மேற்குலக நாடுகளின் உதவிகள் கிடைக்காவிட்டால் போர் முயற்சி மற்றும் தனது திறைசேரி மிகவும் ஆபத்தான நிலையை அடையுமென உக்ரைன் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.