வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று மியன்மாரின் துணைப் பிரதமரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான யூ. தான் ஸ்வே உடன் முக்கிய தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி. மியன்மாரில் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்டு இலங்கைக்கு வரவழைப்பதற்காக மியன்மார் அரசாங்கத்தின் உதவியையும் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.