இன்று (05) காலி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 05 கைதிகள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட இரண்டு கைதிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.