மியன்மாரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 9,652 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக மியன்மார் இராணுவக் குழுவின் தலைவரும், மூத்த தளபதியுமான மின் ஆங் ஹலைங் அறிவித்துள்ளார்.
மியன்மார் சிறையில் உள்ள 114 வெளிநாட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த அரசியல்வாதியும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி உட்பட ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.