பல்வேறு அரச தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

145

உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று (19) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவிற்கும் (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பொன்று நேற்று (19) இடம்பெற்றது.

இதேவேளை, தன்சானியா பிரதமர் காசிம் மஜலிவாவும் ( Kassim Majaliwa ) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மேலும், பஹமாஸ் பிரதமர் பிலிப் ஈ. டேவிஸ் ( Philip E. Davis), எத்தியோப்பியா பிரதமர் அபே அஹமட் (Abiy Ahmed), பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதா (Mariam Chabi Talata), ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து, இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here