போதைப்பொருள் பாவனையை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

341

எதிர்கட்சிகள் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுக்களைத் தௌிவூட்டும் வகையில் நேற்று (19) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு சட்டதையும் சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதேபோல் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உகந்த சூழலையும் உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியின் பாதுகாப்பிற்கும் சட்டமும் சமாதானமும் வலுவூட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் சட்டம், சமாதானம் தொடர்பிலான வெளிப்படைத் தன்மை காணப்படுகிறது. அதற்கு அவசியமான மூலதனம், மனித வளம், தொழில்நுட்பம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது. நாம் அதே நிலைக்குச் செல்ல வேண்டும்.

சுற்றுலாத்துறையை நாம் இலகுவாக அபிவிருத்தி செய்யலாம். இன்றளவிலும் சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்துள்ளது. 25 இலட்சம் சுற்றுலா பயணிகள் இவ்வருடத்தில் இலங்கைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா அபிவிருத்திக்காக அன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்று பலனளிக்கின்றன. அதனால் அந்நியச் செலாவணியும் அதிகமாக கிடைக்கிறது.

எமது நாட்டுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. ஆனால் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மத்தியில் நம்பிக்கை இல்லாதபோது நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

போதைப்பொருள் பாவனை உலகத்தையே உலுக்குகிறது. அவற்றை ஒழிக்க வேண்டும். அதற்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். போதைப்பொருள் ஒழிப்புக்காக பொலிசார் உள்ளிட்ட பாகாப்புத் தரப்பினர் அர்பணிப்புடன் செயற்படுகின்றனர்.” என்று தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here