“உங்களுக்கு எனது முதல் அறிவுரை, அடுத்த முறை நீங்கள் விடுமுறை எடுக்க விரும்பினால், இலங்கைக்குச் செல்லுங்கள். நான் தீவிரமாக இருக்கிறேன். தயவு செய்து இலங்கைக்கு செல்லுங்கள். இதை நான் உங்கள் அனைவருக்கும் கூறுகிறேன்” என இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டவேளை இந்தியா வழங்கிய உதவிகளை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இந்தியா குறித்த சாதகமான உணர்வுகளை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் இந்த உதவிகள் முக்கிய பங்களிப்பை செய்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
“நான் இலங்கைக்கு விஜயம் செய்தேன், எரிபொருள் வரிசைகள் மற்றும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நேரில் பார்த்தேன். இந்த நேரத்தில் முன்னோக்கி வந்த ஒரே நாடு இந்தியா” என்று அவர் கூறினார்.
இதன்போது, இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச நாணயநிதியம் வழங்கியதை விட ஐம்பதுவீதம் அதிகமாக உடனடியாக இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.