தேர்தல்களுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

217

2024 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் 10 பில்லியன் ரூபா தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குரிய செலவுகளை குறித்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து முகாமைத்துவம் செய்ய வேண்டுமெனவும் அமைச்சரவை கவனத்தில் செலுத்தியுள்ளது.

2024 ஆண்டில் தேர்தல் நடாத்துதல்

அரசு கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட நிதி இயலுமையில், 2024 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் 10 பில்லியன் ரூபா தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குரிய செலவுகளை குறித்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து முகாமைத்துவம் செய்ய வேண்டுமெனவும் அமைச்சரவை கவனத்தில் செலுத்தியுள்ளது.

அத்துடன், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி அதிகாரசபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு தேவையான நிதியை அரசில் நிலவும் வரையறுக்கப்பட்ட நிதி இயலுமையில் 2025 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் வழங்க வேண்டியிருக்குமெனவும் அமைச்சரவையால் அவதானிக்கப்பட்டது. இருந்த போதிலும், 2025 ஆண்டில் அந்த இரண்டு தேர்தல்களையும் நடாத்துவதற்கு முன்னர் 1948 அம் ஆண்டின் 17 இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்துக்கு (393 அதிகாரம்) அமைய நிறுவப்பட்ட மற்றும் 2354/06 இலக்க 2023-10-16 திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்படவுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் தேவை ஏற்பட்டால் தொடர்புடைய தேர்தல் சட்டங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சரவை மேலும் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த விடயங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here