இந்த நாட்களில் மிகவும் வறண்ட காலநிலை காரணமாக தோல் நோய்களின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
குழந்தைகளை தினமும் இரண்டு வேளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், தோல் நோய் உள்ள குழந்தைகளை காலை, இரவு என 20 நிமிடம் தண்ணீரில் குளிப்பாட்டினால் கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு குளிப்பதற்கு வாய்ப்பு அனுமதிக்க வேண்டும் என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.