நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது அச்சட்டத்தின் ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அச்சட்டமூலம் பாராளுமன்றத்தின் செயற்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்க மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், துறைசார்ந்தவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்த யோசனைகள் அச்சட்டமூலத்திற்கு அறிமுக்கப்படுத்துவதற்கு முடியவில்லை.
அதற்காக சம்பந்தப்பட்ட திருத்த யோசனைகளை சமர்ப்பித்துள்ள துறை சார்ந்தவர்களுடன் மேலும் கலந்துரையாடி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. திருத்தங்களுக்கு இணங்க நிகழ்நிலைப் பாதுகாப்புத் தொடர்பான சட்டத் திருத்தத்திற்காக சட்டமூலம் தயாரிக்கப்படுவதாக சட்டமூலப் வரைவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.