follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2வைத்தியர் பெல்லனவுக்கு எதிராக வைத்தியசாலை சிற்றூழியர்களின் போராட்டம்

வைத்தியர் பெல்லனவுக்கு எதிராக வைத்தியசாலை சிற்றூழியர்களின் போராட்டம்

Published on

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி அந்த மருத்துவமனையின் சுகாதார பணியாளர்கள் குழுவும் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில், 72 சுகாதார சங்கங்கள் மருத்துவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவைக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. அதன் போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் என்ற ரீதியில் வைத்தியர் ருக்ஷான் பெல்லான பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...