தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு விடுதலை

186

ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்ற தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா விடுதலை செய்யப்பட்டு பாங்காக்கில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பினார்.

74 வயதான முன்னாள் பிரதமருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், உடல்நலக் காரணங்களால் அந்நாட்டு பொலிஸ் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், ஒரு நாள் கூட சிறையில் இருக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தக்சின் ஷினவத்ராவுக்கு 08 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை ஒரு வருடமாக குறைக்க தாய்லாந்து மன்னர் நடவடிக்கை எடுத்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here