வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் நெருக்கடி

162

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் கிட்டத்தட்ட 185 படுக்கைகள் இருந்தாலும், அங்கு சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 350 ஆக அதிகரித்துள்ளது.

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம் என சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்படும் சில உயரதிகாரிகளை வைத்தியசாலையில் சேர்ப்பது குறித்து சமூகத்தில் நிறைய விவாதங்கள் உள்ளன.

எவ்வாறாயினும், மருத்துவ பரிந்துரைகள் இன்றி எந்தவொரு கைதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் பதிலளித்துள்ளார்.

இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here