இலங்கை சுகாதாரத்துறைக்கு 40,000 மெற்றிக் தொன் டீசல் வழங்கிய ஜப்பான்

485

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கை சுகாதார சேவையின் நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 40,000 மெட்ரிக் தொன் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரின் முன்னிலையில் இன்று(19) கொழும்பு துறைமுகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும், டீசல் விநியோகத்தின் வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக, அதிகாரிகள் அதிநவீன எரிபொருள் முகாமைத்துவ தகவல் அமைப்பை (FIMS) அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இது சுகாதார நிறுவனங்கள் முழுவதும் டீசல் விநியோகத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும், வாகனங்கள் மற்றும் வசதிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடுகளின் விரிவான பதிவுகளை பராமரிக்கிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here