மியன்மாரின், மியாவாட் பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பது தொடர்பில், வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர், மியன்மாருக்கான இலங்கைத் தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையர்களை மீட்பதற்காக மியன்மார் அரசாங்கம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மனித கடத்தலில் சிக்கியவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அவர்களது உறவினர்களை தவறாக வழிநடத்தி பணம் வசூலிக்கும் மோசடியும் இடம்பெற்று வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சகம் அறிவுறுத்துகிறது.