புதிய பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகியிருந்ததோடு, CC உறுப்பினர்கள் இருவர் வாக்களிப்பதில் இருந்து விலகினர். முடிவெடுக்க குறைந்தது ஐந்து வாக்குகள் தேவை. இரண்டாவது முறையாக அரசியல் சாசனம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது,” என்றார்.
CC didn’t approve IGP’s appointment. Votes: 4 for; 2 against; 2 abstentions. At least 5 votes are required for a decision. Speaker has a casting vote only in case of a tie. 4/2 is not a tie! Constitution is being blatantly violated for the second time. Shame on you speaker!
— Sajith Premadasa (@sajithpremadasa) February 26, 2024