சமுர்த்தி திட்டத்தை இரத்து செய்ய மாட்டோம்

815

சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க
இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

மேலும், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கு விசேட பொறுப்பை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போதுள்ள முறையில் நலன்புரி நன்மைகள் சபைக்கு இந்த கட்டாயப் பங்களிப்பை வழங்க வேண்டிய பணத்தின் வகையை குறைத்து, மீதமுள்ள பணத்தை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்க இயலாது என ஜனாதிபதி மற்றும் பிரதமரும் ஆலோசனை வழங்கினர்.

2024 ஜூலை முதல் 20 லட்சம் பயனாளிகளின் எண்ணிக்கையை 24 லட்சமாக உயர்த்தும் நேரத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் இந்தப் பயனாளிகள் அனைவரும் பங்களிக்கும் முறையைத் தயாரிக்குமாறு கோரியுள்ளோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here