நாய்களின் தொல்லை அதிகரிப்பு – 62 இலட்சம் நாய்கள் வீதிகளில்

962

வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உரையாற்றுகையில் இலங்கையில் உள்ள நாய்களின் தொல்லைகள் குறித்து விளக்கமளித்தார்.

” தற்பொழுது கிடைத்துள்ள தரவுகளின் படி வீதிகளில் சுற்றித்திரியும் 62 இலட்சம் நாய்கள் உள்ளன. நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ளன. சுற்றுலா பகுதியான சீகிரியாவை எடுத்தாலும் அங்கும் இந்த பிரச்சினை மிகப்பெரிய அளவில் உள்ளன. இது மிகவும் ஆபத்தான நிலை.

இந்த பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்க வேண்டும். விலங்குகளுக்கு வரும் பாதிப்பை தடுக்க புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவரவுள்ளது. ஆனால் அதற்கு முன்னர் நான் சொன்ன பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்” என இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here