கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பதவி விலக்கிய விவகாரம் குறித்த புத்தகம் பேசுபொருளாகியுள்ள நிலையில் அந்த புத்தகத்தில் விடயங்கள் இப்பொழுது வைரலாகி வருகின்றன.
குறித்த புத்தகத்தில் கொரோனா காலத்தில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட விவகாரம் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது நான் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். ஆனால் சுகாதார பிரிவுதான் நிலத்தடி நீருக்குள் இந்த வைரஸ் கலக்கும் என்று கூறி ஜனாஸாக்களை எரிக்க வைத்தார்கள்.
இன்னொருபக்கம் கொண்க்ரீட் பெட்டியொன்றை அமைத்து அதற்குள் அடக்க முடியும் என்ற யோசனையை கூட தான் முன்வைத்ததாகவும் ஆனால் சுகாதார பிரிவு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக பேராசிரியர் மெத்திகா விதானகே தான் இந்த நிலைகளுக்கு காரணம் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ளார்.