தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (10) நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இது இடம்பெறுகின்றது.
பிற்பகல் 2.00 மணிக்கு குளியாபிட்டிய நகரசபை விளையாட்டு மைதானத்தில் ‘நிதர்சனம்’ எனும் தொனியின் கீழ்இந்தப் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.