மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சூரிய மின்சக்தி நிலையம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (11) கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேரதுறை சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நாட்டிற்கும் மக்களுக்கும் பயனுள்ள முதலீட்டு திட்டத்தினை முன்னெடுத்து நாட்டின் மின்சார உற்பத்திக்கு பாரிய பங்களிப்புச் செய்து வரும் வெக்வே சோலார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பு ஒருமுழச்சோலை சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் உட்கட்டுமான பணிகளுக்காக ரூபாய் ஐந்து லட்சம் நிதியுதவியினையும் அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மற்றும இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.