follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1கோட்டாவின் பிரத்தியேக செயலாளருக்கு எதிராக முஜிபுர் CID இல் முறைப்பாடு

கோட்டாவின் பிரத்தியேக செயலாளருக்கு எதிராக முஜிபுர் CID இல் முறைப்பாடு

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு எதிராக முஜிபுர் ரஹ்மான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு.

சுகீஸ்வர பண்டார அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து தொடர்பில், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) சட்டத்தின் 3 (1) வது பிரிவின் அடிப்படையில் இது குற்றமாகும் என்பதால் இது குறித்து தேவையான விசாரணையை முன்னெடுகக் கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினை நேற்று(20) பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்;

“… இறுதியாக இடம்பெற்ற 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. இவ்வருடம் ஒக்டோபரிலும் ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், மீண்டும் இந்நாட்டில் இனவாதம், மதவாதம், இனங்களுக்கிடையிலான விரிசல், சந்தேகங்களை தோற்றுவித்து அரசியல் ரீதியிலான நலவுகளை பெற்றுக் கொள்வதற்கு பெரும் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2022 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது முஸ்லிம் சமூகத்தினரே இந்த பேராட்டத்திற்கு தலைமை தாங்கியதாகவும் முஸ்லிம்களும் சிறுபான்மை சக்திகளுமே கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் இருந்ததாகவும், முஸ்லிம் சமூகத்தினர் கோட்டாபயவை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் எனவும், சிங்கள பௌத்த சக்திகள் இங்கு பிரசன்னமாகி இருக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அவருக்கு மிக நெருக்கமான ஒருவரே இலங்கை புலனாய்வுத் துறையின் பணிப்பாளராக தற்போதும் கடமையாற்றி வருகிறார்.

இந்நாட்டில் புலாய்வுப் பிரிவிற்கும், புலனாய்வுப் பிரதானிக்கும் தெரியாத தகவலை இவர் எவ்வாறு வெளியிட முடியும்? மக்கள் முன்னெடுத்த வெகுஜன போராட்டத்தை இது சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், இது தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், இது முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அல்லது சிறுபான்மை சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமென இந்நாட்டின் புலனாய்வுத் துறையினர் எங்கும் தெரிவித்திருக்காத நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார எவ்வாறு இத்தகைய கருத்துக்களை வெளிப்பட கூற முடியும்?

காலி முகத்திடலை பிரதானமாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பெருவாரியாக இந்நாட்டின் பெருன்பான்மை பௌத்த சமூகத்தினரே முன்னெடுத்திருந்தனர். நாளாந்தம் பொதுமக்களாகவும் குடிமக்களாகவும் அனுபவித்து வந்த நெருடிக்களுக்கு ஆட்சி நிர்வாகம் உரிய தீர்வுகளை வழங்க தவறியதன் விளைவாக வெகுண்டெழுந்த வெகுஜன போராட்டத்திற்கு இனவாத முத்திரை பதிக்க முற்படுவது மீண்டும் இன உறவுகளை சீர்குலைக்க எடுக்கும் முயற்சியாகும்.

இது மீண்டும் அடுத்த தேர்தல்களை இலக்காக் கொண்ட இனத்துவ அரசியலை ஒன்று திரட்டிக் கொள்வதற்கான முயற்சியாகும்.

சுகீஸ்வர பண்டார தற்போது ஜனாதிபதி செயலகத்திலயே கடமையாற்றி வருகிறார்.
எனவே இவ்வாறான கருத்துக்களை நோக்கும் போது மீண்டும் திட்டமிட்ட இனவாத செயற்பாடுகள் அரங்கேறுமோ என்ற சந்தேகம் எழுகிறது…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...