மைத்திரியின் வாக்குமூலம் தொடர்பான CID விசாரணை முன்னேற்ற அறிக்கை இன்று நீதிமன்றுக்கு

495

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து இன்று(27) நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஆராய்ந்த சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், மைத்திரிபால சிறிசேன இரகசியப் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தை சட்டமா அதிபரிடம் சுட்டிக்காட்டிய பின்னர், விசாரணையின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மைத்திரிபால சிறிசேன ஆஜராகியதன் பின்னர், அதன் அதிகாரிகள் அவரை 6 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here