கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்த கப்பல் விபத்து

1601

அமெரிக்காவின் பால்டிமோர் நகருக்கு அருகிலுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது கொழும்பு நோக்கி புறப்பட்ட கொள்கலன் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து அமெரிக்க நேரத்தின்படி நேற்று அதிகாலை 01:25 மணியளவில் சம்பவித்தது.

அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்திலிருந்து அதிகாலை 00:24 மணிக்கு கொழும்பு நோக்கி டாலி என்ற கப்பல் புறப்பட்டது. கப்பல் புறப்பட்டு சுமார் ஒருமணித்தியாலத்தின் பின் Francis Scott Key bridge பாலத்தை நெருங்கியது.

பாலத்தில் மோதிய கப்பல் மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

கப்பல் நிறுவனமான மார்ஸ்க், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.

பின்னர் கப்பல் திடீரென அதன் நேரான பாதையில் இருந்து திசைமாறி மெதுவாக சென்றுள்ளது.

பாலத்தில் மோதிய கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குழுமத்திற்கான தகவல்தொடர்புகளை கையாளும் அதிகாரியான பால் ஆடம்சன், “கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுடன் 22 பேர் இருந்தனர்” எனத் தெரிவித்தார்.

அரசாங்க நிறுவனமான சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செக்யூரிட்டி ஏஜென்சி (CISA )யின் வகைப்படுத்தப்படாத மெமோ, சிங்கப்பூர் கொடியுடன் இருந்த டாலி கப்பல் “உந்து சக்தியை இழந்து” அதன் பின்னரே “பாலத்தின் துணைக் கோபுரத்தில்” மோதியதை உறுதிப்படுத்தியுள்ளது.

மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களுமே இதற்கு பொறுப்பானவர்கள். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கே, எவ்வித மாசும் ஏற்படவில்லை. சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் மேலும், இந்த கப்பலில் 22 பணியாளர்கள் உள்ளனர் என்றும் அனைவரும் இந்தியர்கள் என்றும் கப்பலை இயக்கிய சினெர்ஜி மரைன் குரூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here