அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டும்

335

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும் அதற்கு அவசியமாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

அத்துடன், அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அரசியல்வாதிகள் விளையாட்டுக் கழகங்களில் உயர் பதவிகளை வகிப்பதை தடுக்க முடியுமானால் சிறந்தது என்றும் கூறினார்.

கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் நேற்று (28) நடைபெற்ற சிங்கள விளையாட்டுக் கழகத்தின் (SSC)125ஆவது ஆண்டு பூர்த்தி விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

விளையாட்டுக் கழகங்களில் அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் வழங்காமல் இருப்பது அனைவருக்கும் நல்லதாகும் என நம்புகிறேன். அதேபோல் அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக வைத்திருப்பது காலோசிதமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதனால் நாம் விளையாட்டிலிருந்து விலகி இருக்கிறோம் என்று கூறவில்லை. உங்களின் தேவைகள் குறித்து நாம் கவனம் செலுத்துவோம். நமது தலைவர்களின் சம்பிரதாயங்களை பேண வேண்டியது கடமையாகும்.

அதேபோல், இலங்கை கிரிக்கெட்டை பாதுகாப்பதோடு, கிரிக்கெட்டில் இலங்கை முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here