மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 455 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை

55

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அதன்படி இலங்கை அணி பங்களாதேஷ் அணியை விட 455 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களை பெற்றுள்ள ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மறுமுனையில் பிரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பங்களாதேஷ் அணி சார்பில் Hasan Mahmud 4 விக்கெட்டுக்களையும், Khaled Ahmed 2 விக்கெட்டுக்களையும் ​கைப்பற்றியுள்ளனர்.

போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 531 ஓட்டங்களையும் பங்களாதேஷ் அணி 178 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here