follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுநான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் 268 ஓட்டங்கள்

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் 268 ஓட்டங்கள்

Published on

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இன்றைய ஆட்ட நேர தொடக்கத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணி, தமது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் ஏஞ்சலோ மேத்யூஸ் 56 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

ஹசன் மஹ்மூத் 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்படி, போட்டியை நடத்தும் பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்றைய ஆட்ட நேர முடிவில் , ​​பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக 7 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

அவ்வணி சார்வில் மொனிமுல் ஹக் 50 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற இன்னும் 243 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 531 ஓட்டங்களையும், பங்களாதேஷ் அணி 178 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...