நாடு ஸ்திரமடைந்தாலும் வறுமை இரட்டிப்பாகியுள்ளது

103

அரசாங்கத்தின் கூற்றுப்படி, நாடு ஸ்திரமடைந்தாலும், உலக வங்கியின் பிரகாரம், வறுமை இரட்டிப்பாகியுள்ளது. நாட்டில் தற்போது ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டாலும், வறுமை அதிகரித்து, வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கு தினமும் 3 வேளை உணவு பரிமாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களோடு ஒன்றித்து உறவுகளை பேணுவதால் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் வறுமை அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிந்தது. நாட்டில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வறுமை, அழுத்தம், அசௌகரியம் மற்றும் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர். நன்றாக இருந்த மக்களின் வாழ்வு சுருங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் சொல்லும் ஸ்திரத்தன்மை புதிய இயல்பு நிலையாக்கத்தால் நடந்துள்ளது. புதிய இயல்பு நிலையில் மக்களின் பிரச்சினைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளன, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுமார் 2 இலட்சம் நுண்ரக, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை குறைத்து மக்களை சிரமத்தில் ஆழ்த்தி ஸ்திரத்தன்மைக்கு செல்ல முடியும். மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துள்ள புதிய இயல்பு நிலையால் நாட்டுக்கோ அல்லது 220 இலட்சம் மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை என்பதால், வறுமையை ஒழிப்பதற்கான தேசியத் திட்டமொன்று உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு கல்விக்கு கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here