follow the truth

follow the truth

July, 4, 2025
Homeவிளையாட்டுIPL 2024 : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி

IPL 2024 : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி

Published on

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பட்டாத்தினை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ஓட்டங்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ஓட்டங்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ஓட்டங்களை விளாசினார்.

போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

197 ஓட்டங்களை துரத்திய மும்பை அணிக்கு துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ஓட்டங்களையும் ரோகித் சர்மா 24 பந்துகளில் 38 ஓட்டங்களையும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடினார்.

சூர்யகுமார் யாதவ் 52 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ஓட்டங்களை குவித்தார். மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் ஆகாஷ் தீப், விஜய்குமார் வைசாக் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...