ரயில் படிக்கட்டுகளில் நின்றபடி செல்ல தடை

118

ரயில் படிக்கட்டுகளில் நின்றபடி செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மலையகத்திற்கும் செல்லும் ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிப்பதால் பல விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ரயில் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண, பயணிகள் ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ரயில் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிக்க வேண்டாம் என்று ரயில் திணைக்கள அதிகாரிகள் அறிவித்தாலும், சுற்றுலாப் பயணிகள் அவ்வாறு தொடர்ந்து செய்வதால் அவற்றை தடுக்க கடினமாக உள்ளதாக ரயில் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலானவர்கள் அதிகாரிகளால் தாங்கள் துன்புறுத்தப்பட்டுவதாக ரயில் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்கின்றனர்.

ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்வது தொடர்பாக தற்போது எந்த விதிகளும் நிபந்தனைகளும் இல்லை எனவும், ஆனால், விபத்துக்கள் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here