follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP2போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை

போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை

Published on

போலி சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .

குறிப்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ அடையாளத்துடன் கூடிய ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டி சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் .

போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்துபவர்கள் மற்றும் வைத்தியர்கள் போல் நடித்து சில சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...

3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக...