follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு

மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை கட்சியின் யாப்புக்கு முரணானது எனவும், அவர் அந்தப் பதவியை வகிப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி, வழக்கை எதிவரும் 29ம் திகதி மீண்டும் அழைப்பதற்கும் உத்தரவிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில்...

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ்...

ஈரான் தூதுவர் மீது தாக்குதல் – வர்த்தகருக்கு விளக்கமறியல்

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை...