follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் பணி

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் பணி

Published on

நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் பணியாக இருந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் நான்கைந்து வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை விரைவாக எடுக்க வேண்டியிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடு தற்போது பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டு வருகிறது எனவும், வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவது தொடர்பாக கடன் வழங்கிய நாடுகளுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், பாதுகாப்பு விசேட ஏற்பாடுகள் சட்டத்தை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு சபையை சட்டபூர்வமாக்குவதற்கும் ஆயுதப்படை குழுவை நியமிப்பதற்கும் தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பத்தரமுல்ல அக்குரேகொட, பாதுகாப்பு அமைச்சு வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைமையக வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் நாம் இன்னும் கஷ்டமான நிலையில் தான் இருக்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிலையில் இருந்து மீண்டு வரக்கூடிய திறன் எங்களிடம் உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இராணுவத்தில் இருந்து விலகிச் செல்வோர் தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். அவர்களுக்கு புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை அவர்கள் கண்டறிய வேண்டும். அந்த வாய்ப்பு இல்லாததால், சிலர் ரஷ்யா செல்ல முடிவு செய்தனர். ஒருவரது திறமைக்கேற்ப, நாட்டிலோ வெளிநாட்டிலோ நல்ல வருமானம் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை இணைந்து அதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்மொழியுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச் வீழ்ச்சி, நாட்டின் ஒற்றுமைக்கு மற்றொரு அச்சுறுத்தலாக மாறியது. இந்நிலை நீடித்தால் நமது நாடு பொருளாதாரம் இல்லாத நாடாக அதாவது இன்னொரு லிபியாவாக மாறிவிடும்.

நாட்டைப் பொறுப்பேற்ற பின், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எனது முதல் பணியாக இருந்தது. அத்துடன் எதிர்வரும் நான்கைந்து வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை விரைவாக எடுக்க வேண்டியிருந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...