follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP1புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

Published on

க.பொ.த உயர்தர தகவல் தொழிநுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி நிதியம் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் – 2024/2025 இற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுத் திகதி ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் தகுதி பெற்றுள்ள மாணவ மாணவிகள் தமது விண்ணப்பங்களை உரிய முறையில் நிரப்பி குறித்த திகதிக்கு முன்னர் தமது பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் செயலாளரின் பரிந்துரையுடன், வகுப்பாசிரியர், பாடசாலை அதிபர், மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் பரிந்துரையுடன் செயலாளர், ஜனாதிபதி நிதியம், இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டீ. ஆர் விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மாத்திரம் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தினம் மே மாதம் 22 ஆம் திகதி முடிவடைந்துள்ள போதிலும், கடந்த சில நாட்களில் நிலவிய பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மோசமான காலநிலை காரணமாக விண்ணப்பங்களை அனுப்ப முடியாத மாணவர்கள் அதிகமானோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தப்பிச் சென்ற சந்தேக நபர்- இரு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி தலைமையக பொலிஸ் நிலைய இரண்டு...

ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட் ஏவுதல் முயற்சி தோல்வி

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் முதன்முறையாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட், வெறும் 14 விநாடிகளிலேயே தவறி தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கில்மோர் ஸ்பேஸ்...

இன்றைய காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய...