follow the truth

follow the truth

September, 13, 2024
HomeTOP2ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கு வழங்குவதே நோக்கம்

ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கு வழங்குவதே நோக்கம்

Published on

ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது எந்தவொரு நிறுவனமும் அந்த நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று வலியுறுத்தினார்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மறுசீரமைப்பின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(18) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஆண், பெண் சமத்துவச் சட்டமூலம் குறித்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டது. ஆனால் அதுதொடர்பில் கிடைத்துள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி பெண்களுக்கு சம உரிமை இல்லை. நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையான பெண்களால் அந்த உரிமையைப் பெற முடியாது என்பது, இந்த நாட்டின் பாராளுமன்றத்திற்கும் அரசியலமைப்பிற்கும் எதிரான தீர்மானமாகவே கருத முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து ஒப்பந்தங்களிலும் இது சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது வேறு எந்த அமைப்பும் தலையிட முடியாது.

அந்தப் பணியை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம். எனவே இது தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என இன்று நான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன். அதேபோன்று, அந்தத் தீர்மானத்தினால் பௌத்த மதத்தின் பாதுகாப்பு நீக்கப்படலாம் என்பதால் அந்தக் கருத்தை ஏற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாம் அதுகுறித்து அவதானம் செலுத்தி செயற்பட்டு வருகிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்ற உத்தரவு

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம்...

நீண்ட வார விடுமுறைக்காக இன்று விசேட போக்குவரத்து சேவைகள்

நீண்ட வார விடுமுறைக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (13) முதல் விசேட போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ள போக்குவரத்து...