follow the truth

follow the truth

November, 3, 2024
HomeTOP2மேலும் 14 துறைகளுக்கு வரி அறவீடு செய்ய தீர்மானம்

மேலும் 14 துறைகளுக்கு வரி அறவீடு செய்ய தீர்மானம்

Published on

இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகளில் வரி அறவீடு செய்ய தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாரிய அளவிலான மேலதிக வகுப்புகள், தனியார் பாடசாலைகள், தனியார் மருத்துவ சேவைகள், பொறியியல் சேவைகள், நில அளவை சேவைகள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தத் துறைகளில் பதிவு செய்யப்பட்ட அனைவரின் வருமானம் குறித்து உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் தெளிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வரி செலுத்துவதைத் தவிர்க்க எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாகை – இலங்கை கப்பல் சேவை ஐந்து நாட்களாக அதிகரிப்பு

இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால், நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல்...

அரச – தனியார் ஊழியர்களுக்கான தேர்தல் விடுமுறை தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீற்றர் அளவில் கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...