follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் - 02 வாரங்களுக்குள் வர்த்தமானி வெளியீடு

வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் – 02 வாரங்களுக்குள் வர்த்தமானி வெளியீடு

Published on

வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லநந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்தார்.

கடவத்தை பேருந்து நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்தப் பேருந்து நிலையங்களில் நவீன போக்குவரத்து முகாமைத்துவ முறைகளும், நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

இந்த ஆண்டு கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை 1103 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதிடன், அந்த வீதி விபத்துகளால் 1154 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்நிலைமையைக் குறைக்க எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டுக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாவை இலங்கை பொலிஸாருக்கு வழங்க வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...