அனைத்து நிறைவேற்று அதிகாரமற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் 5000 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அரச ஊழியர்களுக்கு அண்மையில் அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவுடன் சேர்த்து, ஒவ்வொரு ஊழியருக்கும் 15,000 ரூபா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை மறுஆய்வு செய்யவும், அடுத்த ஆண்டு முதல் அவர்களது சம்பளத்தை மாற்றியமைக்கவும் ஏற்கனவே குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.