follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP2"அரசுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளது, ஆட்சியை நடத்துவது ஒரு பிரச்சினையல்ல"

“அரசுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளது, ஆட்சியை நடத்துவது ஒரு பிரச்சினையல்ல”

Published on

அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் சிக்கல் இருக்காது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி சரியான முடிவை எடுக்காவிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களே எஞ்சுவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்துகிறார்.

திவுலபிட்டிய பிரதேசத்தில் நேற்று (4) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

கேள்வி- கம்பஹா மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டுள்ளீர்களா?

பதில்- எனக்கு தெரிந்த வரையில் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்டேன். அது நியாயமானது தான். ஏனெனில் மொட்டு வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம். நாட்டைப் பற்றி யோசித்து முடிவு எடுத்தேன். நான் என் முடிவில் நிற்கிறேன்.

கேள்வி – கட்சி நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை என்று அர்த்தமா?

பதில்- தத்தமது சொந்த நிகழ்ச்சி நிரலில் வேலை செய்யும் போது நாட்டைப் பற்றி சிந்திக்க முடியாது. இன்று கட்சிக்கும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. 2022 இல் கட்சியின் தலைமையை வேறு ஒருவருக்கு வழங்கியிருக்கலாம். டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி வேட்பாளராக முன்வந்தபோது எமது தலைவர்கள் அவருக்கு ஆதரவளிக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு அந்த அனுபவம் இல்லை. எனவே, எமது தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்தது சரியான முடிவு. ஜனாதிபதி நாட்டை கஷ்டங்களிலிருந்து மீட்டெடுத்த போது உரிமை கோருபவர்கள் ஏராளம். ஆனால் பரிசோதனைகளுக்குச் சென்றால், மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள்.. அதனால்தான், வீண் பேச்சு பேசாமல், நல்ல வேலையைச் செய்தவருக்கு நாட்டைத் திருப்பித் தருவோம் என்று சொல்கிறோம்.

கேள்வி- ஜனாதிபதி அதை விளம்பரப்படுத்த சென்றதால் நீங்களும் மற்றவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டீர்கள், இல்லையா?

பதில்- 2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்களை அப்படித்தான் நடத்தியது. இன்று அந்தக் கட்சிக்கு என்ன நடந்துள்ளது? நாம் புத்திசாலித்தனமாக செயற்படாவிட்டால் மொட்டுவிற்கும் இதே நிலைதான். நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவை நேசிக்கிறோம். அந்த அன்பினால்தான் கட்சியை காப்பாற்றி வைத்திருந்தோம்.. அவர் போன அன்றே இந்த கட்சி முடிந்துவிட்டது.

கேள்வி- மொட்டுக்கு இப்போது என்ன நடக்கும்?

பதில்- அது ஒரு பேரழிவாக இருக்கும். இது அவர்களின் சொந்த வேட்பாளர்களில் ஒருவர் போட்ட ஒப்பந்தம் ஆகும். கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற முடியாது. சஜித்துக்கும் ரணிலுக்கும் இடையில்தான் போட்டி. எங்களுக்கு ஒரு ஒப்பந்தமும் இல்லை. பணத்தால் கட்சியை விற்க முடியாது. இது மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி.

கேள்வி- பதவிகள் இல்லாமல் நீங்களும் மற்றவர்களும் தேர்தலுக்கு செல்ல முடியுமா?

பதில்- கட்சி வழங்கும் பதவிகள் அரசியல் சபையைப் போன்றது. அதில் இருப்பவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள், தங்கள் சொந்தப் பாதுகாப்புடன் இருப்பார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவரை நாட்டு மக்கள் கேட்கிறார்கள். இன்று வரை இந்த கட்சியின் மாவட்ட தலைவராக நான் இல்லை. எனக்கு அத்தகைய நியமனம் வழங்கப்படவில்லை. அந்த நியமனத்தை மக்கள் தான் கொடுத்தார்கள். பலாத்காரமாக கொடுத்த தலைமையை எந்த அளவிற்கு ஏற்பார்கள் என்று பார்ப்போம்.

கேள்வி- கட்சி இல்லாத இன்றைய நிலை உங்களுக்கு சவாலாக இல்லையா?

பதில்- இல்லை… ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியின் பின்னர் மொட்டு அல்லது வேறொரு கட்சியுடன் கூட்டணி அமையும். தற்போது இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் அனைத்து இனங்களும் எங்கள் மேடையில் ஒன்றுபட்டுள்ளன, மக்கள் எதிர்பார்க்கும் அமைப்பு மாற்றம் எங்கள் பக்கம் உள்ளது.

கேள்வி- கட்சி எடுத்த முடிவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? நாமல் ராஜபக்ஷயா?

பதில்- பசில் ராஜபக்ஷ இந்தக் கட்சியை ஒன்றிணைத்தார். பதவிகளை கொடுக்கும்போது அனுபவமுள்ள ஒருவருக்கு கொடுக்க வேண்டும். 2022 இல் அனுபவமில்லாதவர்கள் நாட்டைக் பொறுப்பேற்ற அதே நிலைதான் இன்று கட்சிக்கும் நடக்கிறது.

கேள்வி – மொட்டு பிளவடைந்தது அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் இல்லையா?

பதில்- ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் என்ற வகையில் நான் கடந்த இரண்டரை வருடங்களில் அந்த சவாலை எதிர்கொண்டேன். எங்களுக்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை. எஞ்சிய இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நாம் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும். எங்களுக்கு தனிப் பெரும்பான்மை உள்ளது.

கேள்வி- இறுதியில் மொட்டில் எத்தனை பேர் எஞ்சியிருப்பார்கள்?

பதில்- சரியான தீர்மானம் எடுத்தால் நாம் மொட்டுவுடன் இருப்போம். தவறான முடிவு எடுத்தால் இரண்டு மூன்று பேர் மிஞ்சுவார்கள்.

கேள்வி- ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒன்றிணையுமாறு மொட்டிலுள்ளவர்கள் உங்களுடன் கலந்துரையாடுகின்றார்களா?

பதில்- நாங்கள் எங்கள் கருத்தை தெரிவிக்கிறோம். அவ்வளவு தான். கட்சியின் முன்னாள் தேசிய அழைப்பாளர் ரோஹித அபேகுணவர்தன களுத்துறை மாவட்ட மக்களின் குரலுக்கு செவிசாய்த்து எம்முடன் இணைந்தார். மகிந்தவுக்கு பலம் கொடுத்த எஸ்.எம்.சந்திரசேன போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இன்று எங்கள் பக்கம் வந்து விட்டார்கள். மகிந்த காற்றை நாடு முழுவதும் கொண்டு சென்றவர்களில் எஞ்சியிருப்பது நானும் பிரதமரும் மட்டுமே. மற்ற அனைவரும் நம்மை விட்டு பிரிந்து போய் விட்டார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...