தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) நிராகரித்துள்ளது.
இந்த உத்தரவை அறிவித்த உயர் நீதிமன்ற அமர்வின் தலைவர் யசந்த கோதாகொட, இந்த இடையீட்டு மனுவின் வழக்குக்கான ஆதாரம் இல்லாததால் நிராகரிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.
வணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன தேரர், பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் மற்றும் கொட்டபிட்டிய ராகுல தேரர் ஆகியோர் இந்த மனுவினை முன்வைத்தனர்.