சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணை தொடர்பாக கலந்துரையாடுவது மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவது இதன் எதிர்பார்ப்பாகும்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீ நிவாசன் தலைமையில் குழு அமைக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை அவர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.